×

துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு செல்ல இந்திய கப்பல்களுக்கு தடை விதிக்கவில்லை: சீன தூதரகம் விளக்கம்

புதுடெல்லி:  லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீற முயன்றதால் கடந்த ஜூன் முதல் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தனது நாட்டு துறைமுகத்துக்கு வந்த 2 இந்திய சரக்கு கப்பல்களை சீனா சிறைபிடித்து வைத்துள்ளது. எம்பி ஜெகன்நாத் என்ற சரக்கு கப்பல் சீனாவின் ஜிங்தாங் துறைமுகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நிறுத்yக்தப்பட்டுள்ளது.  இதில், 23 இந்திய ஊழியர்கள் இருக்கின்றனர். இதேபோல், எம்வி அனஸ்தாசீயா என்ற கப்பலும்,  காபீடியன் துறைமுகத்தில் நிற்கிறது. இதில், 16 இந்திய ஊழியர்கள் இருக்கின்றனர். இக்கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்கவும் சீன அரசு அனுமதி அளிக்கவில்லை.  

இிதனால், கப்பலில் உள்ள இந்தியர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இ்ந்நிலையில், இந்திய சரக்கு கப்பல்களுக்கு சரக்குகளை இறக்கவும், துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு செல்லவும் அனுமதி அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. இது குறித்து இந்தியாவில் இருக்கும் சீன தூதரக அதிகாரி ஜி ரோங் கூறுகையில், “சீன அதிகாரிகள் எந்த கப்பல் புறப்பட்டு செல்வதற்கும் அனுமதி மறுக்கவில்லை,” என்றார்.

Tags : Indian ,port ,Chinese , Port, Indian Ships, Chinese Embassy, Description
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...