ஜனவரி 4ம் தேதி முதல் தேஜஸ் ரயில் நிறுத்தம்: திருநாவுக்கரசர் கண்டனம்

சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் வரும் 4ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்ற ரயில்வே துறையின் அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காலை, மாலை சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை சென்று கொண்டிருக்கும் தேஜஸ் விரைவு ரயில் போதுமான பயணிகளின்  ஆதரவின்மையால், வரும் 4ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்திருப்பது மிகவும் தவறான நடவடிக்கை ஆகும்.

பொதுமக்கள் சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். விமானங்களில் செல்ல முடியாதவர்களும், பேருந்துகளிலும் செல்ல விரும்பாதவர்களும்  நடுத்தர கட்டணத்தோடு விரைவாக செல்ல சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை செல்ல பல்வேறு மாவட்ட மக்களுக்கும் தேஜஸ் ரயில் வசதியாக இருந்தது. பொதுமக்களின் நலன் கருதியும், வசதி கருதியும் லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் தேஜஸ் ரயில் தொடர்ந்து இயக்கப்படவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories:

More