8 வழிச்சாலையை கைவிட வேண்டும்: தேர்தல் குறித்து முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம்: பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: சட்டசபை தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாசுக்கு வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இணையவழி மூலமாக நடந்தது. கூட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:சட்டப்பேரவைத் தேர்தல்,தமிழ்நாட்டை விட பாமகவுக்கு இன்னும் முக்கியமானதாகும்.   

தமிழகம் முழுவதும் 100 தொகுதிகளை அடையாளம் கண்டு, அந்தத் தொகுதிகளில் 2 கோடி வாக்காளர்களை சந்திக்க வேண்டும். பாமக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிட்டாலும் அத்தனை தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது தான் முதன்மைப் பணி. சட்டப்பேரவை தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்குகிறது. தமிழகத்தில் கல்வி- வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும். தேர்தல் கணிப்புகளை தடை செய்யவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை அவற்றின் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும்.

8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். பேரறிவாளன் விடுதலைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும். தமிழக அரசு, மீதமுள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும். அது குறித்த அறிவிப்பை பொங்கல் பரிசாக தமிழக அரசு வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>