தொழில், வணிகத்துறைக்கான எழுத்து தேர்வு 9ம் தேதி நடக்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொழில் மற்றும் வணிகத்துறையில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பணிகளுக்கு வரும் 9 மற்றும் 10ம்  தேதிகளில்  எழுத்து தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தேர்வாணையத்தால் கடந்த மாதம் 9ம் தேதி அறிவிக்கப்பட்ட தொழில் மற்றும் வணிகத்துறையில் உதவி இயக்குநர் (தொழில்நுட்ப பிரிவு) மற்றும் உதவி கண்காணிப்பாளர் (வேதியியல் பிரிவு) பணிகளுக்கான எழுத்து தேர்வு வரும் 9ம் தேதி காலை 9.15 மணி மற்றும் மதியம் 1.45 மணிக்கு  5 மாவட்டங்களில் 13 தேர்வு மையங்களிலும், வரும் 10ம் தேதி மதியம் 1.45 மணிக்கு மட்டும் 5 மாவட்டங்களில் 5 தேர்வு மையங்களிலும் நடைபெறும்.

விண்ணப்பதாரர்களின் தேர்வு மைய நுழைவு சீட்டு www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து நுழைவு சீட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>