×

57 தாசில்தார்களுக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு, பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் வட்டாட்சியர்கள் 57 பேருக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு வழங்கி பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வருவாய்துறையில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்கள் 57 பேருக்கு துணை ஆட்சியராக பதவி உயர்வு  வழங்கியும், பணியிட மாற்றம் செய்தும் அரசு செயலாளர் அதுல்யமிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை நிலசீர்திருத்த துறை கண்காணிப்பாளர் செல்வம், செங்கல்பட்டு தகவல் தொழில்நுட்ப சாலை மேம்பாட்டு திட்ட தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு). வேலூர் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் சாந்தி, ஸ்ரீபெரும்புதூர் சென்னை விமான நிலைய விரிவாக்கம் தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு). சென்னை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் சத்திய பிரசாத், ராணிப்பேட்டை உதவி ஆணையர் (கலால்). திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் ஜோதி சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் கியூரி, சென்னை சமூகபாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர். சென்னை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் முரளி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உதவி ஆணையர் (பறக்கும் படை). சென்னை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் சுப்ரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர். சென்னை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் மணிமாலா, சென்னை தமிழ்நாடு அரசு இ-சேவை முகமை துணை ஆட்சியர்.

திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் அபிஷேகம், சென்னை மாவட்ட கலெக்டர் கூடுதல் நேர்முக உதவியாளர். திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் கற்பகம், சென்னை தெற்கு தமிழ்நாடு மாநில வாணிப கழக மாவட்ட மேலாளர். தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் நல்லசிவன், தி.நகர் குடிமைபொருள் வழங்கல் உதவி ஆணையர்.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் கவுசல்யா, சென்னை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் சுமதி, சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் அலுவலக துணை ஆட்சியர் (நிர்வாகம்). சென்னை மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் சரளாதேவி, சென்னை மாநகராட்சி துணை ஆட்சியர். திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகு வட்டாட்சியர் சண்முகம், சென்னை நில நிர்வாகத்துறை உதவி ஆணையர் (நில எடுப்பு) என மொத்தம் 57 பேருக்கு பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Deputy Collectors ,Dashildars ,Government of Tamil Nadu , Tasildars, Transfer, Government of Tamil Nadu, Order
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...