21 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலை சீரமைக்கப்படும்: திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் உறுதி

செங்கல்பட்டு: 21 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட  ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலை அமைத்து தரப்படும் என எம்எல்ஏ வரலட்சுமி  மதுசூதனன் உறுதியளித்தார். மறைமலைநகர் நகராட்சி மல்ரோசாபுரத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. நகர திமுக செயலாளர் ஜெ.சண்முகம் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டார். அப்போது அவர், மக்கள் கிராமசபை கூட்டத்தில், அதிமுக அரசின் அவலநிலை குறித்து விவாதித்து,    அக்கட்சியை நிராகரிப்போம். திமுக ஆட்சி மலர, அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முதல்வரானவுடன், செங்கல்பட்டு தொகுதியில் கிடப்பில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். மறைமலைநகர் நகராட்சியில் பஸ் வசதி, சமுதாய கூடம், சுகாதார நிலையம், நூலகம் என அனைத்தும் விரைவில் நிறைவேற்றி  தரப்படும் என்றார். தொடர்ந்து அவர், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று  வழங்கினார்.

 இதில், வட்ட செயலாளர்கள் பரணி, நித்யா, உதயா, சுரேஷ், சுப்பிரமணி, சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஆல்பட், ஆப்பூர் சந்தானம், சிலம்பு செல்வன், சீனு உள்பட பலர் கலந்துகொண்டனர். கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கீரப்பாக்கம், குமிழி ஊராட்சிகளில், மக்கள்சபை கூட்டம் நேற்று நடந்தது. காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி  அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், மாவட்ட பிரதிநிதி எம்.டி.சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி  அமைப்பாளர் ஏ.வி.எம்.இளங்கோவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை பேச்சாளர் மலர் மு.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுமக்கள், கீரப்பாக்கம் ஊராட்சியில், சீரான குடிநீர் இல்லை. தெருவிளக்கு சரிவர எரிவதில்லை. 100 நாள் வேலைக்கு சம்பளம் சரிவர வழங்குவதில்லை. இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. சாலை வசதி, மருத்துவ வசதி,  பஸ் வசதி, சமுதாய கூடம், இலவச தொகுப்பு வீடு உள்பட பல்வேறு வசதிகள் குறித்து பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என சரமாரியாக புகார் கூறினர். அதற்கு, வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக ஆட்சிக்கு வந்ததும், 21 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலை அமைத்து தரப்படும் என எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் உறுதியளித்தார். இதில், தொழிலதிபர் மதுசூதனன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜேந்திரன், தமிழ்ச்செல்வம், முஸ்தபா, குணசேகரன், குமிழி ஊராட்சி திமுக செயலாளர் மேகநாதன், நிர்வாகிகள் தேவேந்திரன், சிலம்பரசன், நேரு, கண்ணன், தினேஷ்,  நித்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: