பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பசுமை வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு: ஊராட்சி தலைவர்கள் பரபரப்பு புகார்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பசுமை வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாக ஊராட்சி தலைவர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஊராட்சி மன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டும்,  வறுமை கோட்டுக்கு கீழ் பட்டியலில் உள்ளவர்களாக இருந்தால், வீடு கட்ட பயனாளியாக ஒன்றிய ஆணையர் தேர்வு செய்து உத்தரவு வழங்குவார். இந்நிலையில், பசுமை வீடு வழங்குவதில் ஊராட்சி மன்ற தீர்மானம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தகுதிகள் பார்க்காமல் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.  அச்சங்கத்தின்  தலைவர் நொச்சிலி சிட்டி கிருஷ்ணமநாயுடு கூறுமையில்,  ஒன்றிய ஆணையர் பசுபதி  பசுமை வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்வதில், அரசின் விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டிருப்பதாகவும், தகுதியான பயனாளிகள்  ஏமாற்றமடைந்துள்ளதால், மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>