×

கூடங்குளம் காவல்நிலையத்தில் பரபரப்பு காதல் கணவருடன் பைக்குகள் திருடிய தக்கலை பெண் போலீஸ் அதிரடி கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர் தம்பிதுரை (29). தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஒரு மாதத்துக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக அவரது புது பைக்கை போலீசார் பறிமுதல் செய்து காவல்  நிலையத்தில் நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் கோர்ட்டில் அபராதம் செலுத்தி விட்டு பைக்கை பெற போலீஸ் நிலையம் வந்தார். அப்போது அங்கு நின்ற பைக் மாயமானது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஏ.எஸ்.பி. சாமேசிங் மீனா, கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, எஸ்ஐ சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை  சோதனை செய்தனர். அதில் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் கிரேஸியா (29) துணையுடன் கணவர் அன்புமணி (33) பைக்கை திருடியது தெரிய வந்தது.

கிரேஸியா கடந்த 10 மாதமாக கூடங்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எத்து தங்கி உள்ளார். கணவர் அன்புமணி முக்கூடல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்  புரோட்டா மாஸ்டராக உள்ளார். கிரேஸியா வாரத்தில் 3 நாள் இரவு பாரா டூட்டியில் இருந்துள்ளார். அப்போது கணவர் அன்புமணியிடம் தான் இரவு பணியில் வேலை பார்ப்பதை கூறிவிடுவார். இதையடுத்து அன்புமணி கூடங்குளம் காவல்நிலையம் வருவாராம். பின்னர் அங்கு நிறுத்திருக்கும் பைக்கை கிரேஸியா துணையுடன் திருடி ஆர்சி புக் இல்லாமல் முக்கூடல், பாவூர்சத்திரம் பகுதியில் குறைந்த  விலைக்கு விற்றது தெரியவந்தது. சுமார் 10 புது பைக்குகளை திருடி விற்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பெண் காவலர் கிரேஸியா, கணவர் அன்புமணி ஆகிய 2 பேரையும் போலீாசர் அதிரடியாக கைது செய்தனர்.  சுமார் 3 பைக்குகளையும் மீட்டனர். ஒரு திருட்டு செல்போன், விசாரணை கைதிகளிடமிருந்து திருடப்பட்ட வெள்ளி அரைஞான் கொடிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. பெண் காவலர் கிரேஸியா  நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும், அன்புமணி ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையிலும் இன்று காலையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் காதல் திருமணம்

பெண் காவலர் கிரேஸியாவின் சொந்த ஊர் தக்கலை. கடந்த 2011ம் ஆண்டு காவலராக தேர்வு பெற்று சென்னை பட்டாலியன் போலீசில் பயிற்சியில் இருந்தார். பின்னர் சென்னை ஆயுதப்படையில் வேலை பார்த்த போது  நகைக் கடையில் சேல்ஸ் மேனாக இருந்த நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்த அன்புமணியுடன் காதல் மலர்ந்துள்ளது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனை கைபிடித்துள்ளார்.  சென்னையில் கடந்த 2017ம் பதிவு திருமணம் செய்து ெகாண்டனர். 2 வயத்தில் ஒரு குழந்தை உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நெல்லை மாவட்ட ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு கூடங்குளம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் சென்னையில் நகைக் கடையில்  வேலை பார்த்த அன்புமணியும் தனது சொந்த ஊரான சீதபற்பநல்லூருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். பின்னர் முக்கூடலிலுள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.  இவர் வாரத்திற்கு ஒரு முறை கூடங்குளம் சென்று மனைவி கிரேஸியா, குழந்தையை பார்த்து செல்வார். அப்போது தான் போலீஸ் மனைவியுடன் சேர்ந்து பைக்குகளை திருடி விற்பனை செய்துள்ளார்.



Tags : police station ,Kudankulam , Thakkala woman arrested for stealing bikes with her romantic husband
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...