×

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் சஞ்சீப் பானர்ஜி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் சஞ்ஜீப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமித்து குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினார். சென்னை உயா்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்சய் பானர்ஜி பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலிஜியம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டின் மிக பழமையான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பணியாற்றி வருகிறார். இந்த பரிந்துரைகள் முறையாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதனை அவர் ஏற்றுக்கொண்ட பின்னர் நீதிபதிகளின் பதிவி பிரமானம் நடைபெற்றது.

Tags : Sanjeeb Banerjee ,Chief Justice ,Chennai High Court , High Court, 50th, New Chief Justice, Appointed, Sanjeeb Banerjee
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...