×

திமுக வெற்றி பெறுவது நிச்சயம் : எர்ணாவூர் நாராயணன் அறிக்கை

சென்னை:சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஏழை எளிய மக்களுக்கு  பல்வேறு திட்டங்கள்,  உதவிகள் மேற்கொண்டு தமிழ் மற்றும் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டது திராவிட முன்னேற்ற கழகம். ரஜினி அரசியல் கட்சி தொடங்கினாலும் சரி, தொடங்காவிட்டாலும் சரி , யாருக்கும்  எவ்வித பாதிப்பும் இல்லை. 25 ஆண்டுகளாகவே மக்களையும் அவரது ரசிகர்களையும் அரசியலுக்கு வருவதாக கூறி ஏமாற்றி வந்தார். தற்போது வயது முதிர்வு மற்றும் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என கூறுவது வேடிக்கையாக உள்ளது. அனைவரும் எதிர்பார்த்த ஒன்றை தான் ரஜினி அறிவித்து இருக்கிறார்.

5 ஆண்டுகளாக எதுவும் செய்யாத ஆளுங்கட்சிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள்.  இதை, கிராம சபை கூட்டங்களில் மக்கள் அனைவரும் தளபதியிடம் தெரிவித்து வருகின்றனர் . 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின்  ஆட்சியில் அமர போவது நிச்சயம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Ernavur Narayanan , DMK, Victory, Ernavur Narayanan, Report
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி