கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜொலிக்கும் தேவாலயங்கள்.: புத்தாண்டை சிறப்பாக கொண்டாட ஆயத்தம்

கன்னியாகுமரி: ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்கள் மின் ஒளியில் ஜொலிக்கின்றன. இன்று இரவு 12 மணி உடன் 2020 விடைபெற்று 2021 பிறக்க இருக்கிறது. இதனால் கிருஸ்துவ தேவலையங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற உள்ளது. அதற்கான தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கிருஸ்துவர்கள் அதிகம் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் தேவாலயம், கிறிஸ்து நாதர் தேவாலயம் மற்றும் பெண்கள் கிருஸ்துவ கல்லூரி அருகே அமைந்துள்ள கால்கோவில் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் வண்ணமயமான விளக்குகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு இந்த தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளன.

Related Stories:

>