×

மகர விளக்கு பூஜையையொட்டி நேற்று நடைதிறப்பு.: சபரிமலையில் 2 அர்ச்சகர்கள் உள்பட 37 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில்  அர்ச்சகர்கள் இருவர் உள்பட மொத்தம் 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அர்ச்சகர்கள் இருவர், இன்று பக்தர்கள் என மொத்த 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவசனம் போர்டு தலைமை அர்ச்சகர் வி.கே.ஜெயராஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜனவரி 14-ம் தேதி மாலை 6.45 மணிக்கு பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு தரிசனம் நடைபெற உள்ளது. சபரிமலையில் ஜனவரி 19-ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு 20-ம் தேதி நடை சாத்தப்படுகிறது.


Tags : Capricorn Lantern Pooja ,Corona ,Sabarimala ,priests , Capricorn Lantern Worship Opening yesterday: Corona for 37 people including 2 priests in Sabarimala
× RELATED சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப...