×

டிவி நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி 16 பக்க அறிக்கை தாக்கல்

சென்னை: நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி 16 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சித்ராவுடன் தொடர்புடையவர்கள் 15 பேரிடம் விசாரணை நடத்தி போலீசில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் தேதி கைது செய்தனர். முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினார்.

சித்ராவுடன் டிவி சீரியலில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார். விசாரணை அறிக்கையில் வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்யவில்லை என கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : RTO ,Chitra ,suicide , RTO files probe into TV actress Chitra's suicide
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?