×

மிரட்டும் புதிய வகை கொரோனா...! இந்தியாவில் சில நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்கும்; எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

டெல்லி: இந்தியாவில் சில நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறி உள்ளார். புனேவை தளமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, கோவிஷீல்ட் என்ற தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர ஒப்புதல் கோரியுள்ளது, இது உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம் என இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வருகிற திங்கட்கிழமை முதல் அங்கு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது.

அதுபோல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினா அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த இரண்டாவது நாடாக அர்ஜென்டினா இணைந்துள்ளது. இங்கிலாந்தில் பயன்படுத்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது பெரிய முன்னேற்றம் ஆகும். இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி சில நாட்களுக்குள் கிடைக்கும்  என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை  இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். இது குறித்து டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒழுங்குமுறை அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது  என்பது மிகவும் நல்ல செய்தி. அவர்களிடம் வலுவான தரவு உள்ளது. அதே தடுப்பூசியை இந்திய சீரம் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளூக்கும் ஒரு முன்னேற்றமாகும். இந்த தடுப்பூசியை இரண்டு முதல் எட்டு டிகிரி சென்டிகிரேடில் சேமிக்க முடியும்.

எனவே சேமித்து வைப்பது  மிக எளிதானது. மைனஸ் 70 டிகிரி சென்டிகிரேடில் உள்ள பைசர் தடுப்பூசியில் தேவைப்படுவதை விட சாதாரண  குளிர்சாதன பெட்டியைப் பயன்படுத்தி இதனை சேமிக்க முடியும். மிக விரைவில் எதிர்காலத்தில் நம் நாட்டில் தடுப்பூசி கிடைக்கும். தடுப்பூசியைப் பொருத்தவரை நாட்டில் ஒரு வலுவான திட்டம் உள்ளது. தடுப்பூசி குறித்து இப்போது, ​​எங்களிடம் ஒரு தரவு உள்ளது, மேலும் இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தரவுகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்பித்தவுடன்  சில நாட்களுக்குள்  தடுப்பூசிக்கான ஒப்புதலைப் பெற முடியும். மாதங்கள் அல்லது வாரங்களுக்கு பதிலாக நாட்கள் என்று கூறுவேன் என கூறினார்.

Tags : Ames ,India , Intimidating new type of corona ...! The corona vaccine will be available in India within a few days; Ames Director Info
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்