சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் நைஸ் சாலையில் வழிப்பறி நடக்கிறதா? விசாரணை நடத்த அசோக்கெனி மனு

பெங்களூரு: நைஸ் சாலையில் வழிப்பறி நடப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் தகவல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் நைஸ் நிறுவன தலைவர் அசோக்கெனி புகார் கொடுத்துள்ளார். பெங்களூரு-மைசூரு இடையில் அமைக்கப்பட்டுள்ள நைஸ் சாலையில், இரவு நேரத்தில் செல்லும் வாகனங்களை வழிப்பறி கும்பல் தடுத்து நிறுத்தி பயங்கர ஆயுதங்களால் தாக்கி பணம், ஆபரணங்கள் கொள்ளை அடிப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியுள்ளது. 25 வினாடிகள் ஓடும் வீடியோவில் கார் ஒன்றை கும்பல் ஒன்று விரட்டி சென்று தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக நந்தி இன்ப்ராஸ்டக்சர் காரிடார் நிறுவன தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அசோக்கெனி, பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் கொடுத்துள்ள புகாரில், நைஸ் சாலையில் வழிப்பறி கொள்கை நடப்பது தொடர்பாக எந்த புகாரும் இதுவரை எங்கள் நிறுவனத்திற்கு வரவில்லை. ஆனால் சமூக வளைத்தலங்களில் வெளியாகியுள்ள வீடியோ மற்றும் ஆடியோவில் வழிப்பறி நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. நைஸ் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் கும்பல் கார் மற்றும் பைக்கில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்குவதாகவும், இதில் பாதிக்கப்பட்டு வாகனம் நிறுத்தும்போது, ஓடி சென்று பயணிகளை கடுமையாக தாக்கி பணம், பொருட்கள் பறித்து செல்வதாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் வீடியோவில் வெளியாகி இருப்பதுபோல், எந்த சம்பவமும் நடப்பதில்லை. எங்கள் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சதி நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். நைஸ் சாலையில் வழிப்பறி கொள்கை நடப்பது தொடர்பாக எந்த புகாரும் இதுவரை எங்கள் நிறுவனத்திற்கு வரவில்லை.

Related Stories:

>