புகைப்பிடிப்பவர்களிடம் ரோஜா பூ கொடுத்து விழிப்புணர்வு

கோலார்: புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரோஜா பூ கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோலார் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட கல்வி துறை மற்றும்  மாவட்ட புகையிலை தடுப்பு மையம் இணைந்து, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களிடம் ரோஜா பூ கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். குறிப்பாக சாலையோரம், பெட்டி கடைகளில்  சிகரெட் பிடித்து கொண்டிருந்தவர்களிடம் ரோஜா பூ கொடுத்து, இனி மேல் புகைக்காதீர்கள் என்று கேட்டு கொண்டனர். நாட்டில் புகையிலை பயன்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கானோர் புற்றுநோயால்பாதிக்கப்படுகிறார்கள். ஆண்டுதோறும் சிகிச்சை பலனின்றி 10 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். புகையிலை ஒழிப்பதால், லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட சுகாதார அதிகாரி சாரணி தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>