×

இளைஞர்களே ஜாக்கிரதை தங்கவயலில் ‌பாலியல் பிளாக்மெயில் கும்பல்: சைபர் போலீஸ் தீவிர விசாரணை

தங்கவயல்: தங்கவயலில் பாலியல் உணர்வுகளை தூண்டி வாட்ஸ் அப் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் திவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கவயலில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்புகளில் கணக்கு வைத்திருக்கும், சுமார் 25 முதல் 40 வயது வரை உள்ள நபர்களை குறி வைக்கும் இந்த கும்பல், அவர்களுக்கு பெண்கள் பெயரில் நண்பராக அழைப்பு விடுக்கின்றனர். பின்பு அவர்களின் ஆசையை தூண்டி விடுவது போல் பேசி பழகிய பிறகு, இவர்களின் வலையில் சிக்கும் அப்பாவிகளுக்கு மொபைல் போனில் வீடியோ காலிங்  அல்லது  வாட்ஸ்சாப் கால் செய்கின்றனர்.

வாட்ஸ்சாப், மற்றும் பேஸ்புக்கில் பழகிய பெண் தான் போன் செய்வதாக நம்பி ஏமாறும் அப்பாவிகள் அவர்களின் வீடியோ அழைப்பை ஆன் செய்ததும். ஆடை இல்லாத நிலையில் பெண் உரையாட தொடங்கியதும், வீடியோ அழைப்பில் பதிவாகும் காட்சிகள் ஸ்கிரீன் ஷாட் மூலம் படம் பிடிக்க பட்டு, அந்த காட்சிகள் உடனே அந்த அப்பாவி நபருக்கு அனுப்பி வைக்க பட்டு ₹ 20ஆயிரம் முதல் ₹30ஆயிரம் வரை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தங்கவயலில் நடந்து வருவதாக தெரிகிறது. இது குறித்து ஏமாறும் நபர் சைபர் கிரைம் போலீசிலோ அல்லது யாரிடமும் சொல்லாம் மறைத்து  விடுவது, இந்த மோசடி கும்பலுக்கு வசதியாக போய் விடுகிறது. வீடியோ பதிவில் தங்கள் முகமும் இருப்பதால் வெளியில் தெரிந்தால் கேவலம் என்று கருதி பிளாக் மெயில் செய்யும் நபர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து பலர் ஏமாந்துள்ளனர்.

இது போன்ற ஆன்லைன், வீடியோ, இணையதளம், மொபைல் போன்களில் அறிமுகம் இல்லாத நபர்களினின் தொடர்பை துண்டித்து விட வேண்டும். என்றும் முன், பின் அறிமுகம் இல்லாத யாரிடமும் தொடர்போ, விவரங்களோ வழங்குவது கூடாது  என்றும் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் குறித்து புகார் தரும் நபர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எனவே தைரியமாக இது போன்ற சம்பவங்கள் குறித்து புகார் செய்யலாம்  என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். தங்கவயலில் நடந்து வரும் இது போன்ற சம்பவங்கள் குறித்து உரிகம் பேட்டையில் உள்ள சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்கிரீன் ஷாட் மூலம் படம் பிடிக்க பட்டு, அந்த காட்சிகள் உடனே அந்த அப்பாவி நபருக்கு அனுப்பி வைக்க பட்டு ரூ.20ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள்  தங்கவயலில் நடந்து வருவதாக தெரிகிறது.

Tags : Youth Beware Goldfields ‌Sex Blackmail Gang: Cyber Police Intensive Investigation
× RELATED ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல்...