விஷம் குடித்து விவசாயி தற்கொலை

மைசூரு: மைசூரு மாவட்டம் ஹூனசூரு தாலுகா பி.ஆர்.காவலு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, அப்பாஜிகவுடா. இவருக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் விவசாய பணிகள் மேற்கொள்ள வங்கியில் ரூ.9 லட்சம் கடன் பெற்றார். அந்த பணத்தில் புகையிலை, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டார். ஆனால் புகையிலையில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வந்தனர். இதில் மனரீதியாக பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று காலை தோட்டத்துக்கு சென்று புகையிலை பதப்படுத்தும் அறையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

>