டெல்லி பூங்காவில் உயிரிழந்த வெள்ளைப்புலியின் 2வது குட்டியும் பலி

புதுடெல்லி: டெல்லி விலங்கியல் பூங்காவில் நிர்பயா என்கிற பெண் புலி பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் உயிரிழந்த நிலையில், தாய் இறந்த 17 நாட்களுக்கு பின்னர் அதன் குட்டியும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. டெல்லி விலங்கியல் பூங்காவில்  நிர்பயா என்கிற வெள்ளைப்புலி இரண்டு குட்டிகளை ஈன்றது. அதன்பின் அடுத்தகுட்டிகளை ஈன்ற முயற்சித்தபோது ஏற்பட்ட பிரசவ சிக்கலால் துடித்தது. எனினும், தொடர்ந்து குட்டிகளை பிரசவிக்க முடியாமல் பரிதாபமாக கடந்தடிசம்பர் 14ம் தேதியன்று உயிரிழந்தது.  அதனுடன் குட்டி ஒன்றும் இறந்தது.

மீதமுள்ள ஒரு குட்டி கால்நடை மருத்துவமனையில் ஒரு பிரத்யேக குழுவினரால் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் அதுவும் ”கடுமையான நோய் தொற்றுக்கு” ஆளானது.  பின்னர் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று இறந்துவிட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும், அதன் உள்ளுறுப்பு ஹிஸ்டோ-நோயியல் மற்றும் பிற ஆய்வுக்காக  பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட உள்ளது என்று பூங்காவின் இயக்குநர் ரமேஷ் பாண்டே தெரிவித்தார். தற்போது, ​​மிருகக்காட்சிசாலையில் ஒரு ஜோடி வங்காள புலிகள் மற்றும் ஐந்து வெள்ளை புலிகள் உள்ளன.

Related Stories:

>