நொய்டாவில் அமேசான் இ-காமர்ஸ் கிடங்கில் தீ விபத்து

நொய்டா: நொய்டாவில் உள்ள ஒரு இ-காமர்ஸ் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அதேபோன்று மற்றொறு சம்பவமாக நேற்று  அதிகாலை ஸ்கிராப் சேமிப்பு கிடங்கு ஒன்றில் தீப்பிடித்து பொருட்கள் நாசமாயின. நொய்டாவின் செக்டார்61 பகுதியில் அமேசான் நிறுவனம் நிர்வகித்து வரும் குடோன் ஒன்றுஉள்ளது. இங்கு அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர்  அதிகாலை 4.30 மணியளவில் தீயை முழுவதும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானதாக பேஸ்-2 காவல் நிலைய அதிகாரிகள் கூறினர். அதேபோன்று, நொய்டாவின் செக்டார் 7 இல் ஒரு ஸ்கிராப் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>