×

தொழிற்சாலைகள், நிறுவனங்கள் திறப்பால் தமிழகத்தில் மின்தேவை அதிகரித்துள்ளது

சென்னை: தமிழகத்தில் மழை இல்லாதது மற்றும் தொழிற்சாலைகள் திறப்பு, வர்தக நிறுவனங்கள், கடைகள் பலவும் வழக்கம்போல திறக்கப்பட்டதால் மின்நுகர்வு அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றார்போல மின்தேவையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (29ம் தேதி) நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவை 13,442 மெகாவாட்டாக இருந்தது. முன்னதாக கடந்த மாதம் (29ம் தேதி) இதே நாளில் தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவையின் அளவு 11,055மெகாவாட்டாக இருந்தது.

இவ்வாறு மின்தேவை நடப்பு மாத்தில் உயர்ந்திருப்பதற்கு காரணம் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், வங்கிகள், அரசு அலுவலங்கள் வழக்கம்போல செயல்பட ெதாடங்கி உள்ளன. இதனால் மின்உபயோகம் கொரோனா காலத்தை விட அதிகரித்துள்ளது.மேலும் வீடுகளில் ஏசி, ஃபேன், பிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடு குறைவாக இருந்தது. இதனால் அப்போது மின்சாரத்தின் தேவை குறைவாக இருந்தது. தற்போது மழை இல்லாததால் வீடுகளில் மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே மின்தேவையின் அளவும் 2,387 மெகாவாட் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : opening ,factories ,companies ,Tamil Nadu , Factories, Companies, Tamil Nadu
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!