தீயணைப்புத்துறை இயக்குநர் டிஜிபி ஜாபர்சேட் இன்றுடன் ஓய்வு

சென்னை: தீயணைப்புத்துறை இயக்குநராக பணியாற்றிய டிஜிபி ஜாபர்சேட் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்று மாலை போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுகிறது. தமிழக தீயணைப்புத்துறை இயக்குநராக இருப்பவர் டிஜிபி ஜாபர்சேட் (60). இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. அதைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுகிறது. இதற்காக எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் முதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வரை இந்த அணிவகுப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

டிஜிபியான ஜாபர்சேட், 1985ம் ஆண்டு நேரடியாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். பின்னர் விஐபிக்கள் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றினார்.

அதைத் தொடர்ந்து மத்திய மண்டல ஐஜி மற்றும் உளவுத்துறை ஐஜியாகவும் பணியாற்றினார். கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.

அதைத் தொடர்ந்து டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சிவில் சப்ளை பிரிவு டிஜிபியாகவும், பின்னர் கடைசியாக தீயணைப்புத்துறை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றியவர், இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

Related Stories:

>