ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் அதிமுக தப்பியுள்ளது: திருமாவளவன் பேட்டி

சிதம்பரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று நிவாரண உதவி வழங்கினார்.  முன்னதாக அவர் அளித்த பேட்டி:   அரசியல் கட்சி துவக்க மாட்டேன் என ரஜினிகாந்த் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது. ரஜினி கட்சி துவங்காததால் அதிமுகவிற்கு ஏற்பட இருந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டு இருப்பதாக கருதுகிறேன். கட்சி துவக்கி இருந்தால் அதிமுகவை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்திருப்பார்கள். இந்த நேரத்தில் ரஜினி கட்சி துவங்காததால் அதிமுக தப்பிப் பிழைத்திருக்கிறது.  ரஜினி கட்சி துவங்கினாலும், அவர் துவங்காமல் விட்டிருந்தாலும் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய அளவிற்கு பலமான கூட்டணியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>