×

ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல் பேட்டி

புதுக்கோட்டை: மநீம தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்பது எனது விருப்பம், நண்பன்  என்ற முறையில் ரஜினியை சந்திக்கும்போது சட்டமன்ற தேர்தலில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்பேன் என்று திருமயத்தில் கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கடந்த 2 நாட்களாக திருச்சி, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நேற்றுமுன்தினம் இரவு திருமயம் அடுத்த கடியாப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கமல், நேற்று காலை திருமயம் கடைவீதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக கமல் அளித்த பேட்டி: ரஜினி ஐதராபாத்தில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து பேசினேன். அவர் சென்னை திரும்பிய பிறகு இன்னும் பேசவில்லை. அவர் நலனை விரும்புவோர்களில் நானும் ஒருவன். சென்னை சென்றவுடன் அவரை நேரில்  சந்தித்து பேசுவேன். நண்பன்  என்ற முறையில் சந்திக்கும்போது சட்டமன்ற தேர்தலில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்பேன்.
 
தமிழகத்தில்  பாஜக ஆட்சி அமைக்க கூடாது என மக்களே விரும்புகின்றனர்.  சிறுமிகள் பாலியல்  வன்கொடுமைகள் சம்பவத்தில் தனிப்பட்ட முறையில் திருந்த வேண்டும். ஒரு உயிருக்கு மற்றொரு உயிரை  எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தனிப்பட்ட முறையில் நான்  மரண தண்டனைக்கு எதிரானவன். மரண தண்டனையால் இதுபோன்ற குற்றங்கள் குறையும்  என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஜனவரியில் கூட்டணி  குறித்து அறிவிப்பேன். கூட்டணி என்பது மக்கள் நீதி மய்யம் தலைமையில் இருக்க  வேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர். அவர்களது விருப்பமே எனது  விருப்பமும். ஆன்மிகத்திற்கு நான் விரோதமானவன் அல்ல. ஆன்மிகத்தை நான்  ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை யாரும் ஆன்மிகத்தின் வழியில் செல்ல வேண்டும்  என்று நிர்பந்திக்க முடியாது. விவசாயிகள் 35 நாட்களாக டெல்லியில் போராட்டம்  நடத்தி வருகின்றனர். பிரதமர் உடனடியாக அவர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பரிசுத்தொகை ஊழலின் ெதாடர்கதை
கமல் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டு  மக்கள் பாஜகவை  விரும்பவில்லை. என்னை மீண்டும் மீண்டும் பாஜகவின் பி டீம்  என்பதற்கு என்  வாழ்க்கையே பதிலாக இருக்கும். பொங்கல் பரிசுத் தொகையாக 2500  ரூபாய்  வழங்குவதற்கு, அமைச்சர்களின் புகைப்படத்துடன் டோக்கன்கள்  வழங்கப்படுவது  ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுவும் ஊழலின் தொடர்கதை தான் என்று கூறினார்.

Tags : interview ,Rajini ,Kamal , 'My wish is to have an alliance led by Manima. I will ask Rajini to support me in the Assembly elections when I meet him as a friend,' Kamal Haasan said.
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...