இந்திய அணியுடன் 3வது டெஸ்ட் 18 வீரர்கள் அடங்கிய ஆஸி. அணி அறிவிப்பு: பர்ன்ஸ் அதிரடி நீக்கம் : வார்னருக்கு வாய்ப்பு

மெல்போர்ன்: இந்திய அணியுடன் சிட்னியில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி சேர்க்கப்பட்டுள்ளனர். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்று முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, அடுத்து மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்டில் இந்திய அணியிடம் சரணடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸி. அணி நிர்வாகம், சிட்னியில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. மொத்தம் 18 வீரர்கள் அடங்கிய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 2வது டெஸ்டில் சொதப்பிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

வார்னர், புகோவ்ஸ்கி, அபாட் ஆகியோர் சிட்னி டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஷான் அபாட், பேட் கம்மின்ஸ், கேமரான் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், மோய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபுஷேன், நாதன் லயன், மைக்கேல் நெசர், ஜேம்ஸ் பேட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேடு, டேவிட் வார்னர்.

Related Stories:

>