ஏமன் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி

ஏடன்: ஏமன் நாட்டில் தெற்கு பிரிவினைவாதிகளும், வெளிநாடுகளின் அங்கீகாரம் பெற்ற கட்சிகளும் இணைந்து நேற்று புதிதாக ஆட்சி அமைத்தன. பின்னர், பதவியேற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் விமானம் மூலமாக சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலமாக ஏடன் விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்ேடார் காயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, விமான நிலைய பகுதியில் பயங்கர வெடிகுண்டுகளும் வெடித்தன. இதையடுத்து, விமான நிலையத்துக்கு கூடுதல் ராணுவம் வரவழைக்கப்பட்டது. அதற்குள் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர்.

Related Stories:

>