×

பல் டாக்டரை பிடிக்க 4 தனிப்படை

சென்னை: மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் தேர்வு மதிப்பெண்கள் கொடுத்த வழக்கில் தலைமறைவாக உள்ள பல் டாக்டர் மற்றும் மாணவியை கைது செய்ய 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். தமிழக மருத்துவ கலந்தாய்விற்கு போலி நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் சமர்ப்பித்தது. போலி தரவரிசை பட்டியல், கலந்தாய்வுக்கான போலி அழைப்பு கடிதம் தயாரித்து மோசடி செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் ஆகியோர் மீது பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

காவல் துறை சார்பில் 3 முறை சம்மன் அனுப்பியும் மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் நேரில் ஆஜராகவில்லை.
அதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல் டாக்டர் தனது குடும்பத்துடன் பெங்களூரு தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. உயர் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதற்குள் மோசடியில் ஈடுபட்ட மாணவி மற்றும் அவரது தந்தையை கைது செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் போலீசார் ஏற்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து இணை கமிஷனர் சுதாகர் உத்தரவுப்படி பல் டாக்டர் மற்றும் மாணவியை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர் செல்போன் சிக்னல் மற்றும் உறவினர்கள் செல்போன் சிக்னல் உதவியுடன் கைது செய்ய பல்வேறு கோணங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : dentist , Dentist, SCORD
× RELATED பல் டாக்டர் வீட்டில் கொள்ளை சிசிடிவி...