விளையாட்டு வீரர்கள் மற்றும் கற்போர்: நீச்சல் குளத்தில் பயிற்சி எடுப்பது எப்படி?: வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: நீச்சல் குளங்கள் செயல்படுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா  பரவுவதை கட்டுப்படுத்த விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளுக்காக நீச்சல் குளங்கள் செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து, நீச்சல் குளங்கள் செயல்படுவதற்கான நிலையான வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

*  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட கூடாது.

* பாதுகாப்பு சூழ்நிலைகளில் ஏற்படுத்திய பிறகே விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும்.

* அரசு அதிகாரிகள், நீச்சல் குளங்களில் வழிகாட்டி நெறிமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும்.

* நீச்சல் குளத்திற்கு செல்வதற்கு முன்னர் கிருமிநாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

*  குடிநீர் பாட்டில் மற்றும் துண்டு விரிப்புகளை பகிர்ந்து கொள்ள கூடாது.நீச்சல் குளத்தில் தினசரி கட்டணம் செலுத்தி குளிப்பதற்கும், பயிற்சி முகாமிற்கும் அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* வீரர்கள், பயிற்சியாளர்கள், பணியாளர்களின் வருகை மற்றும் வெளியே செல்லும் போது அவர்களின் முழு விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

*  குறைந்த அளவு பணியாளர்களே பணி செய்ய வேண்டும். வீரர்களை சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும்.

* நீச்சல் குளத்தை சுற்றி அடிக்கடி கிருமி

நாசினி தெளிக்க வேண்டும்.

* வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட அனைவருமே வெப்ப பரிசோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களை அனுமதிக்க கூடாது. நீச்சல் குளங்களில் எச்சில் துப்பக்கூடாது.

* வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட அனைவருமே வெப்ப பரிசோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களை அனுமதிக்க கூடாது. நீச்சல் குளங்களில் எச்சில் துப்பக்கூடாது.

12 வயதுள்ளோருக்கு அனுமதியில்லை

தமிழக தலைமை செயலாளர் அறிக்கை, ‘‘மாநில, தேசிய, உலக அளவில் நடைபெற உள்ள நீச்சல் போட்டிகளுக்கு தயாராகும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம். 12 வயதுக்கு கீழ் உள்ள வீரர்கள் பயிற்சி  பெறவும், உடற்பயிற்சிக்காக நீந்துவோருக்கு அனுமதி கிடையாது. கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரும் வீரர்கள் பயிற்சியில் அனுமதிக்க கூடாது.

Related Stories:

>