×

கபசுர குடிநீர் புதிய கொரோனாவை கட்டுப்படுத்தும்: லயோலா கல்லூரி ஆய்வில் தகவல்

சென்னை: புதிய கொரோனா வைரசை கபசுர குடிநீர் கட்டுப்படுத்தும் என்று சென்னை லயோலா கல்லூரி நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. லயோலா கல்லூரி பேராசிரியர்கள் வின்சன்ட், முனைவர் மனோஜ் தன்ராஜ் ஆகியோர் கூறியதாவது: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர் முக்கியப் பங்காற்றி உள்ளது. அனைத்து வைரஸ் தாக்குதலில் இருந்தும் பாதுக்காக்க கபசுர குடிநீர் பெரிதும் உதவியுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதற்கு கபசுர குடிநீர் முக்கிய காரணம். கொரோனாவில் பாதிக்கப்பட்ட 90 சதவிதம் பேர் குணமடைய கபசுர குடிநீர் உதவியாக இருந்துள்ளது.

வைரசின் வீரியத்தை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் கபசுர குடிநீரில் உள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பையும் கபசுர குடிநீர் கட்டுப்படுத்தும், இனிவரும் காலத்தில் புதிய வைரஸ் தாக்குதலுக்கும் கபசுர குடிநீர் மருந்தாக பயன்படும். எனவே, மரபுவழி மருத்துவத்தை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். சித்த மருத்துவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் அளிக்க வேண்டும். ஆயுர்வேதம், யோகா, சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்து வகை சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். 50 சதவீதம் பாரம்பரிய மருத்துவ முறை மற்றும் 50 சதவீதம் அலோபதி மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும். கபசுர குடிநீரை அரசு அங்கீகரிக்க வேண்டும். பல நாடுகள் கபசுர குடிநீரின் தேவையை உணர்ந்துள்ளன. இவ்வாறு கூறினர்.

Tags : Kapasura ,Loyola College , Kapasura Drinking Water, Corona
× RELATED வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு