×

ரயில்வே அட்டவணை மாற்றம்

சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிடப்பட்ட அறிக்கை: வருகிற ஜனவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) புறநகர் சிறப்பு ரயில்கள் வார நாட்களில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே முழு அளவில் இயக்கப்படும். மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் சேவையானது சென்னை புறநகர் பகுதிகளில், கடந்த 21ம் தேதி முதல் 27 தேதி வரை இயக்கப்பட்ட கால அட்டவணைப்படியே இயக்கப்படும்.

மேலும் வரும் ஜனவரி 1 மற்றும் ஜனவரி 3 ஆகிய நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணை பின்பற்றப்படமாட்டாது. தொடர் விடுமுறை நாட்களில் அதிகமானோர் பயணம் மேற்கொள்வர் என்பதால், கூட்ட நெரிசலை குறைக்கும் வண்ணமாக இந்த 410 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Tags : Railway, Schedule, Change
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...