×

சிபிஎஸ்இ தேர்வு தேதி இன்று வெளியாகும்

சென்னை: சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியாகும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரங்கால் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10, 11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுத் தேர்வு ஆன்லைனில் நடக்காது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

அதேபோல, டிசம்பர் 10ம் தேதி நடந்த இணை கருத்தரங்கில் பேசும்போதும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளின் அளவில் நடக்கும். கொரோனாவால் செய்முறைத் தேர்வுகளை நடத்த முடியாமல் போனால், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். இருப்பினும்  அதே சூழ்நிலைதான் நிலவுகிறது. இந்நிலையில்தான், பொதுத் தேர்வுக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : CBSE , CBSC, Exam
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...