ஆந்திராவில் திமுக மாணவர் அணியில் மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர் நியமனம்

சென்னை: ஆந்திர மாநிலம் திமுக மாணவர் அணியில் மாநில அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலோடும், மாநில அமைப்பாளர் பரிந்துரையோடும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.எஸ்.ஆரிப் முகமது மாணவர் அணியின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், சித்தூர் மாவட்டம், ஏகாம்பர குப்பம் பகுதியை சேர்ந்த முருகானந்தம். பிரகாசம் மாவட்டம் கங்காவரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு. சித்தூர் மாவட்டம், நகரி பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா. சித்தூர் மாவட்டம், சித்தாந்தலபட்டி பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஆகியோர் துணை அமைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.

Related Stories:

>