×

சரத்குமார் பேட்டி: சமக அரசியல் நிலைப்பாடு என்ன?

சென்னை: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகாவுடன் தரிசனம் செய்தார். அப்போது அவர், ஜனவரி 22ம் தேதி முதல் 5 நாட்கள் அனைத்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசி, அரசியல் நிலைபாடு தெரிவிப்பேன் என கூறினார். நடிகர் சரத்குமார், மனைவி ராதிகாவுடன் நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. ரஜினிகாந்த் அவருடைய சொந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவரது அரசியல் பற்றி பேச விரும்பவில்லை.

அவர்களின் உடல் நலம் என்றும் சிறப்பாக இருக்கவேண்டும். கலை உலக பயணமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் எடுத்து வைக்கும் அனைத்து பணிகளும் சிறப்பாக நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். மேலும் ரஜினியின் முடிவு வரவேற்கத்தக்கது. வரும் ஜனவரி 22ம் தேதி முதல் 5 நாட்கள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை கேட்டு அரசியல் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்றார்.

Tags : interview ,Sarathkumar , Sarathkumar, Interview
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...