×

இரண்டரை கிலோ தங்கம் வாங்கி பணம் மோசடி: நகை வியாபாரி கைது

தண்டையார்பேட்டை: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்ரதா ஜனா(46). சவுகார்பேட்டையில் தங்க நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் பத்து பேர் பட்டறையில் வேலை பார்த்து வருகின்றனர். இவரிடம் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நகை வியாபாரிகள் நகை செய்து வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த தங்க நகை வியாபாரியான அய்யனார்(50). சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறைகளில், தங்க நகைகளை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். இங்கு பெரும்பாலான நகை பட்டறைகளில் கொடுக்கல் வாங்கல்  இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு அய்யனார் சுப்ரதா ஜனா பட்டறையில் இருந்து இரண்டரை கிலோ தங்க நகைகளை வாங்கி சென்றுள்ளார்.

பின்னர், அதற்கு உண்டான பணம் எதுவும் தரப்படவில்லை என தெரிகிறது. இதனால் சுப்ரதா ஜனா  யானைக்கவுனி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மதுரையில் பதுங்கியிருந்த அய்யனாரை ேநற்று முன்தினம் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் நகை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அய்யனாரை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Jeweler , Thandayarpet, money, fraud, jeweler, arrested
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!