×

கும்மிடிப்பூண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், திருவள்ளூர் மாவட்ட  முன்னாள் செயலாளரும் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணுவுக்கு உடல்நலம் சரியில்லை.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கத்தில் உள்ள  கி.வேணுவின் வீட்டிற்கு நேற்று நேரில் வந்து நலம் விசாரித்தார். இதில்  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்எல்ஏ மாதவரம் எஸ்.சுதர்சனம்,  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன், திமுக  மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சி.எச்.சேகர், தலைமை செயற்குழு  உறுப்பினர் முர்த்தி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு  உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, பகலவன், கே.வி.ஜி.உமா மகேஷ்வரி,  வெங்கடாசலபதி, மாவட்ட பிரதிநிதிகள் கி.வே.ஆனந்தகுமார், இஸ்மாயில், ஒன்றிய  செயலாளர்கள் மு.மணிபாலன், கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MK Stalin ,DMK ,visit ,Gummidipoondi , Former Gummidipoondi MLA and former Tiruvallur district secretary and DMK high level working committee member Gummidipoondi K. Venu is not feeling well.
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...