விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் மினி கிளினிக்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் மினி கிளினிக்கை  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில்,‘‘தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள்  செயல்படும் வகையில் இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். விருதுநகர்  மாவட்டத்தில் முதற்கட்டமாக 20 இடங்களில் முதலமைச்சரின் மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மினி கிளினிக்குகள் படிப்படியாக துவக்கி வைக்கப்படும். இந்த மினி கிளினிக்குகளை பொதுமக்கள் நல்லமுறையில்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.2,500 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,’’என்றார். நிகழ்ச்சிகளில், துணை  இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பழனிச்சாமி (விருதுநகர்) அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்,

 விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளராக எஸ்.எஸ்.கதிரவன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற  செயலாளராக கோகுலம் தங்கராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், விருதுநகர் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், ராஜசேகர், யூனிய்ன் தலைவர் சுமதிராஜசேகர், அருப்புக்கோட்டை ஒன்றிய  செலாளர்கள் சங்கரலிங்கம், யோகாவாசுதேவன் மற்றும் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>