×

இயற்கை விவசாயி நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னை: நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல் ஜெயராமன் அவர்களின் மகன் படிப்பு செலவை சிவக்கார்த்திகேயன் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இயற்கை விவசாயத்தின் தீவிரப் பிரச்சாரகரும் தமிழகத்தின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவருமான டாக்டர் ஜி. நம்மாழ்வாருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இயற்கை விவசாயம், விவசாயிகள், இயற்கை வாழ்வு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படச் செய்தார். விவசாயிகளின் நலனுக்கும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும் பல போராட்டங்களை முன்னெடுத்தார். காலாவதி ஆக்கப்பட்ட மரபு சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களை மீட்டெடுத்துப் புதுப்பித்தார். இறுதிவரை விவசாயிகளுக்கும் வேளாண் துறைக்கும் சுயநலன் கருதாமல் மகத்தான பங்களிப்பை வழங்கி வந்ததுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் ஊக்குவித்த சாதனை மனிதராக  நம்மாழ்வார் வாழ்ந்தார்.

Tags : Sivakarthikeyan , Nammazhvar Award, Selection, Actor Sivakarthikeyan
× RELATED காமெடி பண்றவங்கள UNDERESTIMATE பண்ணாதீங்க! Sivakarthikeyan செம Fun Speech at Garudan Audio Launch.