×

மதுரை எய்ம்ஸ் அமையும் இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 90% நிறைவு!

மதுரை: மதுரை எய்ம்ஸ் அமையுமிடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முழுமையாக நிறைவுபெறும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைகான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதுவரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடைபெறாதது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறையிடம் கேள்வி எழுப்பினார். முதலீட்டுக்கு முந்தைய பணிகளான மண் பரிசோதனை மற்றும் இடம் தொடர்பான ஆய்வு பணிகள் முழுமையாக முடிவடைந்திருப்பதாகவும் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிவடையும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.

பிரதான நுழைவுவாயில் மற்றும் பாதுகாவலர் அறை அமைக்கும் பணிகளை மார்ச் 31ல் முடிக்க இலக்கு முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை. தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரிதும் பயனடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.



Tags : site ,Madurai AIIMS , Madurai, AIIMS, perimeter wall work, 90% completed
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...