நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.30 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், டிச.30: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில், ரூ1.30 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 6 ஆயிரம் மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலம் நடத்தினர்.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், ஒரு குவிண்டால் பருத்தி ரூ7469க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ1.30 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Related Stories:

>