பணத்தை வீசியெறிந்து சிலர் அழுகிய எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது போல் திரிணாமூல் காங்கிரசையே விலைக்கு வாங்கி விட முடியாது : மம்தா தாக்கு

போல்பூர், :பணத்தை வீசியெறிந்து சிலர் அழுகிய எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது போல் திரிணாமூல் காங்கிரசையே விலைக்கு வாங்கி விட முடியாது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கட்சி மாறிய எம்.எல்.ஏக்களை விமர்சித்தார்.சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போல்பூரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் ேபரணி நடந்தது. அப்போது  மம்தா பானர்ஜி பேசுகையில், ‘வெளியில் இருந்து வந்தவர்கள் (பாஜக) வெறுப்பு அரசியலையும், போலியான அரசியலையும் கொண்டு வந்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் முதுகெலும்பைச் சிதைக்க முயல்கிறார்கள். ஆனால், ரவிந்திரநாத் தாகூர் மண்ணில் அதுபோன்று ஏதும் நடக்காது.

 அவர்களால் எம்எல்ஏக்களை மட்டும்தான் விலைக்கு வாங்க முடியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வாங்க முடியாது. காந்தி போன்ற மதிப்புமிக்க பல்வேறு தலைவர்கள் மீது மதிப்பு இல்லாதவர்கள்தான், வங்கத்தைத் தங்கமாக மாற்றுவோம் எனப் பேசுகிறார்கள். ஆனால், வங்காளம் ஏற்கெனவே தங்கமாகத்தான் இருக்கிறது. இதை ரவீந்திரநாத் தாகூர் ஒரு கவிதையிலேயே குறிப்பிட்டுள்ளார். இப்போது நாம் செய்ய வேண்டியது, பாஜகவின் வகுப்புவாதத்தில் இருந்து மாநிலத்தைக் காக்க வேண்டும். ரவீந்திரநாத் தாகூரின் மண் ஒருபோதும் மதச்சார்பின்மையை அழித்துவிட்டு வகுப்புவாத அரசியல் மேலே வர இடம் அளிக்காது’ என்று பேசினார்.

Related Stories:

>