போலீஸ்காரரை தாக்கியவர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிபாபு(26). கவரப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று  பைக்கில் சின்னம்பேடு வழியாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சின்னம்பேடு மேம்பாலத்தின் கீழ் சாலையோரமாக மூன்று பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். ஹரிபாபு அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹரிபாபுவை சரமாரியாக தாக்கினர். புகாரின்பேரில், கவரப்பேட்டை போலீசார் சின்னம்பேடு பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வருவாய் ஆய்வாளரின் உதவியாளர் தேவராஜ்(44) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>