சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்:மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வேறு பூஜைகள் எதுவும் நடக்காது. நாளை (31ம் தேதி) முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடக்கிறது. 20ம் தேதி காலை 6 மணிக்கு பந்தள ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்துக்கு பிறகு நடை அடைக்கப்படும். அத்துடன் 2020-2021ம் ஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைகிறது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 19 வரை தரிசனம் செய்ய தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். மகரவிளக்கு காலகட்டத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய, நேற்று (28ம் தேதி) மாலை முதல் முன்பதிவு தொடங்கி உள்ளது. https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.

Related Stories:

>