போதைப்பொருள் கடத்தல் வழக்கு பினீஷ் கோடியேறி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

திருவனந்தபுரம்: பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தியதாக கேரளாவை சேர்ந்த அனூப் முகமது, ரவீந்திரன், கன்னட டிவி நடிகை அனிகா ஆகியோரை மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறை கடந்த ஆகஸ்ட்டில் கைது செய்தது. விசாரணையில், அனூப் முகமதுக்கும், கேரள மாநில முன்னாள் மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனின் 2வது மகன் பினீஷ் கோடியேறிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறை கடந்த அக்டோபர் 29ல் பினீஷை கைது செய்தது. இந்நிலையில், பெங்களூரு நீதிமன்றத்தில் பினீஷுக்கு எதிராக அமலாக்கத் துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் 4வது முக்கிய நபராக பினீஷ் சேர்க்கப்பட்டுள்ளார். குற்றப் பத்திரிகையில், ‘பினீஷின் வங்கி கணக்குகளில் கடந்த 2012 முதல் 2019 வரை பினீஷின் வங்கி கணக்குகளில் ரூ.5.17 கோடி பணம் வந்துள்ளது. அதில், ரூ.3.95 கோடி கணக்கில் காட்டப்படவில்லை’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>