மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், இந்திரா நகர் மக்களுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து, கனிமவள நிதியில் இருந்து ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி இந்திரா நகரில் பல மாதங்களாக குடிநீர் பிரச்னை இருந்து வந்தது. குடிநீர் பிரச்னையை போக்க  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த இந்திரா நகர் பகுதி மக்களுக்கு கனிமவள நிதியில் இருந்து ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்து, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, அதற்கான பணிக்கு பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி, புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியை துவக்கி வைத்தனர்.

Related Stories:

>