பாஜவை விமர்சிக்கவில்லை: கே.பி.முனுசாமி எம்.பி அந்தர் பல்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திராவிட இயக்கத்தை அழித்துவிட வேண்டும் என்று நீண்ட காலமாகவே போராட்டம் நடந்து வருகிறது. திராவிட இயக்கங்களை அழிக்க முயற்சி செய்பவர்கள் என, எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்களை பற்றி நாங்கள் கூறவில்லை. எங்கள் கூட்டணியில் இருப்பவர்களை விமர்சிப்பதற்கு நாங்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் இல்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது. நாங்கள் எங்களுடன் கூட்டணியில் உள்ள பாஜ கட்சியையோ மற்ற கட்சிகளையோ விமர்சனம் செய்யவில்லை என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: