×

தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்கள் கூடி வாழும் கோலார் மாவட்டம்: பேரவை உறுப்பினர் சீனிவாசகவுடா பெருமிதம்

கோலார்: சாதி,  மதம், மொழி பேதமில்லாமல் அனைவரும் கூடி வாழும் சங்கமமாக கோலார் மாவட்டம்  உள்ளது என முன்னாள் அமைச்சரும் கோலார் தொகுதி பேரவை உறுப்பினர் சீனிவாசகவுடா  பெருமிதம் தெரிவித்தார். மாவட்டத்தின் நரசாபுராவில் கன்னட சேனா  அமைப்பின் சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவ தினம் கொண்டாடப்பட்டது. இதில்  பங்கேற்று கன்னட கொடியை ஏற்றி வைத்து அவர் பேசும்போது, மனிதராக பிறந்த  ஒவ்வொருவருக்கும் மொழி பற்று இருக்க வேண்டும். நாம் தாயை ேநசிக்க யாரிடமும்  கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதேபோல் தாய்மொழியை நேசிக்கவும் யாரும்  சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

மாநிலத்தில் எந்த மாவட்டத்திற்கும்  இல்லாத பெருமை கோலார் மாவட்டத்திற்கு உள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திரா  மாநில எல்லையில் கோலார் மாவட்டம் இருப்பதால் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய  மூன்று மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடன் கூடி வாழும் நந்தவன சங்கமமாக  விளங்குகிறது. மாவட்டத்தில் இதுவரை மொழி பிரச்னையை அடிப்படையாக வைத்து எந்த  கலவரமும் நடந்ததில்ைல. இதை விட மாவட்டத்திற்கு வேறு பெருமை அவசியமில்லை.  இப்போது இருக்கும் மூன்று மொழியினரின் ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும்  என்றார்.

Tags : Kolar district ,Siniwasakauda , Kolar District, Assembly
× RELATED திடீர் உடல்நல குறைவால் மாஜி முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி