×

செவி திறன் குன்றியவர்களுக்கு தையல் இயந்திரம்

கோலார்: கோலார் மாவட்டத்தில் செவி திறன் குறைப்பாடு உள்ளவர்கள் சுயதொழில் தொடங்க இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இது  குறித்து மாநில மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர் நலத்துறை மாவட்ட இணை  இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாவட்டத்தில் செவி திறன்  குறைபாடு உள்ளவர்கள் சுயதொழில் செய்ய வசதியாக இலவசமாக தையல் இயந்திரம்  வழங்கப்படுகிறது. இந்த உதவியை பெற விரும்புவோர் வரும் ஜனவரி 15ம்  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் கொடுப்பவர்கள் கர்நாடகாவில்  பத்தாண்டுகள் வாழ்ந்து வருவதற்கான சான்றிதழ், பத்தாம் வகுப்பு  முடித்துள்ளதற்கான சான்றிதழ், செவிதிறன் குறைப்பாடு உள்ளதை உறுதி செய்யும்  மருத்துவ சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொடுக்க வேண்டும். இது  தொடர்பான விவரம் வேண்டுவோர் 08152-228251 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு  கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



Tags : Self-employed, sewing machine
× RELATED பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி...