×

கொரோனா தொற்று பாதிப்பு: 10 ஆண்டுகள் இருக்கும்: கோடிமட மடாதிபதி ஆருடம்

பெங்களூரு: உலக மக்களை வாட்டி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் பத்தாண்டுகள் இருக்கும் என்று கோடிமடத்தின் மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திரசுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:, 2019ம் ஆண்டு பிறந்தபோது, ஓரிரு நாட்களில் நான் செய்தியாளர்களிடம் கூறும்போது, இவ்வாண்டு இறுதியில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் கொடிய தொற்று சீனா நாட்டில் இருந்து உருவாகும் என்று கூறி இருந்தேன். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா தொற்று பரவியது. இந்த தொற்று பரவல் பொருளாதாரத்தை சீர்குலைப்பதுடன் 2020ம் ஆண்டு இறுதி வரை இருக்கும் என்று கூறி இருந்தேன்.

அதுவும் நடந்து கொண்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் கூறும்போது, பிரிட்டன் நாட்டில் இருந்து புதிய தொற்று நோய் பரவும் என்று கூறினேன். அதுவும் நடந்து வருகிறது. தற்போது பரவிவரும் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் பத்தாண்டுகள் சமூகத்தில் இருக்கும். ஆனால் தற்போதுள்ள வீரியத்தில் இருக்காமல் நிமோனியா, காசநோய்கள் போல், சிலரை வாட்டி வதைக்கும். அதற்காக அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்ைல. மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கர்நாடக மாநில அரசியலை பொருத்த வரை 2021ம் ஆண்டு பல மாற்றங்கள், திருப்புமுனைகள் ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும். புதிய ஆண்டில் அரசியல் மாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகளவிலும் பல மாற்றங்கள் நிகழும். தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை. இந்தியாவில் முதுபெரும் சில தலைவர்களை இழக்க நேரிடும்’’ என்றார்.

Tags : Corona , Corona, Archbishop of Kodimada, Arudam
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...