×

நொய்டா ஏர்போர்ட்டில் அமைச்சர் இன்று ஆய்வு

நொய்டா: ஜேவரில் கட்டப்பட்டு வரும் நொய்டா சர்வதேச விமான நிலைய கட்டுமான பணிகளை உத்தரப்பிரதேச மாநில விமான போக்குவரத்து அமைச்சர் நந்த கோபால் குப்தா இன்று நேரில் ஆய்வு செய்கிறார். கவுதம் புத்தா நகர் மாவட்டம் ஜேவர் பகுதியில் பசுமை மற்றும் உலக தரத்துடன் நாட்டில் முதல் முறையாக 8 ரன் வே கொண்ட ஏர்போர்ட் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 35,000 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு 5,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக உள்ள இந்த திட்டத்தில், 5,000 கோடியில் 1,300 ஹெக்டேரில் முதல் கட்ட பணிகள் நடைபெறுகின்றன.

பணிகளை விமான போக்குவரத்து அமைச்சர் நந்த கோபால் குப்தா இன்று நேரடி ஆய்வு நடத்த உள்ளதாகவும், பின்னர் தன்னுடன் பரிசீலனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் யமுனை எக்ஸ்பிரஸ்வே தொழிலக மேம்பாட்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி அருண் வீர் சிங் தெரிவித்து உள்ளார். பகல் 12 மணி வரை ஏர்போர்ட் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் குப்தா, பின்னர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் ஆலோசிக்க உள்ளதாகவும் சிங் கூறியுள்ளார். ஏர்போர்ட் முதல் கட்ட பணிகள் 2 ரன் வே உடன் வரும் 2023 டிசம்பர் அல்லது 2024ம் ஆண்டு ஜனவரியில் முடிவடையும் என் கருதப்படுகிறது.

Tags : Noida Airport , Noida Airport, Minister, Research
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை