×

உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் எளிமையான நடைமுறையில் விண்ணப்பம் செய்யலாம்

புதுடெல்லி: உயர் பாதுகாப்பு பதிவெண் பிளேட் (எச்எஸ்ஆர்பி) விண்ணப்பித்தல் மற்றும் பொருத்தும் நடைமுறைகளை எளிமை ஆக்கியுள்ளதாக உற்பத்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. வாகனத்தில் எச்எஸ்ஆர்பி பொருத்தியும், எரிபொருளை அடையாளம் காணும் ஸ்டிக்கர் ஒட்டியும் இருக்க வேண்டும் என நாடு முழுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்கள் இன்னும் இந்த நடவடிக்கையை தொடங்காத நிலையில் இந்த மாத இறுதிக்குள் டெல்லியில் வாகனங்களுக்கு எச்எஸ்ஆர்பி, கலர் ஸ்டிக்கர் கட்டாயம் என கெடு விதிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி குறைவாக இருப்பதால் டெல்லியில் எச்எஸ்ஆர்பி கிடைப்பது கடினமாக உள்ளது.

இந்நிலையில், எச்எஸ்ஆர்பி நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டு உள்ளதாக அதனை தயாரிக்கும் ரோஸ்மெர்ட்டா செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் தெரிவித்து உள்ளது. அந்நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ள தகவல் வருமாறு: புக்மை எச்எஸ்ஆர்பி.காம் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் நுகர்வோர் தெரிவிக்க வேண்டிய தகவல்களை மிகவும் குறைத்து உள்ளோம். வாகன பதிவெண்ணை நுகர்வோர் குறிப்பிட்டதும், மத்திய அரசின் வாகன இணையதளத்தில் அந்த வாகனத்தின் மாடல், எரிபொருள், சேஸிஸ் நம்பர் போன்ற பிற தகவல்களை மென்பொருள் தேடிக் கண்டுபிடிக்கும். இதன் மூலம் நுகர்வோர் குறிப்பிட வேண்டிய 6 தகவல்கள் குறைக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை தகவல் சரியாக பொருந்தவில்லை என்றால், நுகர்வோர் தன்னுடைய புகைப்படம் மற்றும் நம்பர் பிளேட்டின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : High security, number plate, application
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...